அன்றும் இன்றும்

இன்றைய நாள்..
பகல் தூங்கும் நேரம்,
கடற்கரை ஓரம்,
விரல் நனைக்கும் ஈரம்,
நான் நடந்து சென்றேன் தூரம்,

உன் நினைவுகள் என் முன் கிடக்க,
இரு கால்தடங்கள் எனைத்தொடர்ந்து நடக்க,
சிந்தனை சிறகுகள் பின் நோக்கி பறக்க,
எனக்கு மெல்ல ஞாபகம் வந்தது,

இதே போன்ற அன்றொரு நாள்...
உனக்காக ஏங்கிய நேரம்,

என் வீட்டு ஜன்னலின் ஓரம்,
கண்கள் இரண்டிலும் ஈரம்,
நீ மட்டும் வெகு தூரம்,

நினைவுகள் மெல்ல நிஜமாகி திரும்ப,
கடல் நீர் தொடர்ந்து கால்விரல் நனைக்க,
என் இதயத் துடிப்பினிலும் உன்பெயர் கேட்க,
அன்றைய நாள் இன்றும் தொடர்ந்தது!


0 comments to "அன்றும் இன்றும்"