ஒரு வார காதல்

வெகு நாட்களுக்கு பிறகு, என் விரல்கள் சிந்திய சில கவிதை வரித்துளிகள்..


ஞாயிறு அறிமுகமாகி,
திங்களன்று இதயம் பரிமாறி,
செவ்வாயில் முத்தமிட்டு,
புதன் முழுவதும் காதல் கொஞ்சி,
வியாழன் இரவு
வேறொருவனுடன்
மறைந்துவிட்டாள்..

வெள்ளி வானம்
விடியும்வரை
அழுது புலம்பி,
மறுநாள் இரவுதான் புரிந்தது..
வந்து சென்ற(அ)வள்
சனி என்று!


3 comments to "ஒரு வார காதல்"